ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் (19) 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 நவம்பர் 19ஆம் திகதி இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார்.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி அவ்வருடம் நவம்பர் 19ஆம் திகதி முதற்தடவையாக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார்.
1970ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் பெலிஅத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அப்போது பாராளுமன்றத்தில் தெரிவாகிய மிக இளவயது பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.