Ad Widget

இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் நிறைவு

யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 24 இந்திய மீனவர்களும் தங்களின் விடுதலையை வலியுறுத்தி, திங்கட்கிழமை(27) முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(28) காலை 10.30 மணியுடன் முடிவுக்கு வந்தது.

யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, மீனவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, உண்ணாவிரத போராட்டம் கைவடப்பட்டது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட மேற்படி 24 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி 24 மீனவர்களும் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மேற்படி மீனவர்களை சந்தித்த மூர்த்தி, அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இது தொடர்பில் இலங்கை அரசு மற்றும் இந்திய துணைத்தூதரகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து மீனவர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

Related Posts