Ad Widget

இணைய பாவனைக்கு தனியான சிம் அட்டையினை பயன்படுத்துங்கள்

police-ajith-horanaஇணையத்தின் ஊடாக வங்கி சேவைகளை பயன்படுத்துவோர் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இணைய குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இணைய பாவனைக்கென தனியான சிம் அட்டையினை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இணைய வங்கி சேவைகளை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் குறித்த இணையத்தளங்களின் உண்மைத்தன்மையினை இனங்காணுவது அவசியம் என்றும், வங்கிகளின் இணையத்தளங்கள் என சில போலியான இணையத்தள முகவரிகள் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வங்கி கணக்கு விபரங்கள, கடவுச் சொல் விபரங்கள, மற்றும் தனிப்பட்ட விபரங்களை கோரி வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும், குறித்த வங்கிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வங்கி சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கூறினார்.

இணைய குற்றங்களை கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள புலனாய்வு துறையினரின் சிறப்பு பிரிவிற்கு, சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 235 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகளின இணைய வங்கி தொடர்பில் 9 முறைப்பாடுகளும், மின்னஞ்சல் தொடர்பாக 34 முறைப்பாடுகளும் அடங்குவதாக அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

Related Posts