Ad Widget

இணுவில் கிராமத்தை நல்லூருடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகஜர் கையளிப்பு!

இணுவில் கிராமத்தை நல்லூருடன் இணைக்க வேண்டாமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இணுவிலில் இருந்து எங்களை பிரிக்க வேண்டாம் என வலியுறுத்தி ஜே/189 கிராம சேவகர் பிரிவு மக்கள் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்று காலை குறித்த மகஜரைக் கையளித்தனர்.

இது தொடர்பாக குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “வலிதெற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே/189 கிராம சேவகர் பிரிவில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் எம்மை, பிரதேச சபைகளை நகர சபைகளாக மாற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தின் போது இணுவில் கிராமத்தை நல்லூருடன் இணைக்கவுள்ளனர். இதனை நாம் நிராகரிக்கின்றோம்.

எமது இணுவில் கிராமத்துக்கு வலி தெற்கு பிரதேச செயலகம், வலிதெற்கு பிரதேசசபை என்பன மிக அருகாமையில் உள்ளன. இதனை பிரிப்பதால் நல்லூர் பிரதேச செயலகத்துக்கு எமது மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே எமது கிராமத்தை வேறு பிரிவுடன் பிரிக்க நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்” என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Related Posts