Ad Widget

அறிவித்தலைத் தொடர்ந்து வடமராட்சியிலிருந்து வெளியேறும் மீனவர்கள்!

வடமராட்சி கிழக்கில் தங்கியிருந்து கடலட்டை பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் தற்போது வெளியேறிவருகின்றனர்.

யாழ். மாவட்ட எல்லைப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை வெளியேறுமாறு பிரதேச செலரால் விடுக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறிவருகின்றனர்.

அந்த வகையில் பெரும்பாலான வாடிகள் அகற்றப்பட்டு அவர்கள் வெளியேறுவதாக வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களாக வெளிமாவட்ட மீனவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வரையில் வடமராட்சி கிழக்கில் அரச நிலங்களில் வாடிகள் அமைத்து தங்கியிருந்து கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டனர்.

இதனிடையே கிளிநொச்சியில் இவ்வாறு தங்கியிருந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த மீனவர்களை உடனே வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர்கள் வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில், வடமராட்சி கிழக்கில் தங்கியிருப்பவர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல்செய்யும் வகையிலான அறிவித்தல் பிரதேச செயலரினால் ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்தே அவர்கள் வெளியேறிவருகின்றனர்.

Related Posts