Ad Widget

அரசாங்கம் வீசா வழங்க மறுத்தாலும் போர்க்குற்ற விசாரணை நடக்கும்- நவநீதம்பிள்ளை

இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்தாலும், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Navaneetham-pillai-tamilmirrar

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் அவசியமில்லை. உள்ளுர் விசாரணைகள் போதுமானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முதல் தடவையாக அறிவித்துள்ள நிலையில், இலங்கைக்குள் செல்ல தமது குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், இணையத்தள வசதிகளுடனும் செய்மதி வசதிகளுடனும் விசாரணைகளை நம்பகத்தன்மையுடன் முன்னெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

சிரியாவில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், அந்த நாட்டில் முறையான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts