Ad Widget

அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதாக அனந்தி குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு இந்த விடயத்தை ஐ.நா. வில் வெளிப்படுத்த வேண்டியது தமிழ் தலைமைகளின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே எங்களுடைய தரப்பினர் ஐ.நா.வுக்குச் சென்று, நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன் ஊடாக ஐ.நாவில் எமது முயற்சிகளுக்கு பயன்கிடைக்கும்.

அதேபோல் இம்முறையும் எமது தரப்பினர் ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு தாம் செய்வதாக கூறிய விடயங்களை இதுவரையில் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts