Ad Widget

“அனைத்து மக்களுக்கு சமனான ஆட்சியை வழங்க வேண்டியது அவரது கடமை” கோட்டாபய தொடர்பில் கமல்ஹாசன் கருத்து!!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற ரீதியில் அனைத்து மக்களுக்குமான ஆட்சியினை வழங்க வேண்டியது நல்ல தலைவரின் கடமை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஒரிசா மாநிலத்தில் வழங்கப்பட்ட கௌரவ கலாநிதி பட்டத்தினை ஏற்றுக்கொண்டு தமிழகம் திரும்பிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போது இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காத நிலையில், ஈழத்தமிழர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்ல தலைவராக அவர் இருக்க வேண்டும் என நினைக்கும் பட்சத்தில் நல்ல ஆட்சியை வழங்க வேண்டியது அவரது கடமை. இது நாட்டு மக்களின் தீர்ப்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனைத்து மக்களுக்கு சமனான ஆட்சியை வழங்க வேண்டியது அவரது கடமை” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts