ஹேலீஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

hayleys_agricultureஹேலீஸ் அக்ரிகல்ச்சர் (hayleys agriculture) நிறுவனத்தின் புதிய கிளை இன்று திங்கட்கிழமை யாழில் திறந்து வைக்கப்பட்டது. யாழ். கோண்டாவில் வீதியிலுள்ள விவசாய திணைக்களத்திற்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.

வட மாகாணத்திற்கான புதிய கிளையினை ஹேலீஸ் நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளர் ரிஸ்வி சயீட் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்ததுடன் பெயர்ப் பலகை திரை நீக்கமும் செய்துவைத்தார்.

இதன்போது வாடிக்கையாளர்களுக்கு விவசாய பொருட்கள் விற்பனை இடம்பெற்றன. 1878 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 145 வருடங்களுக்கு மேலாக தனது சேவையினை மேற்கொண்டுள்ளதுடன் வட மாகாணத்தில் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து சிறந்த சேவை ஆற்றுவதற்காகவே இன்று இக்கிளை யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor