ஹுட்ஹுட் புயல் யாழ்ப்பாணத்துக்கு வடகிழக்கே நகர்கிறதாம்!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஹுட்ஹுட் புயல் யாழ்ப்பாணத்துக்கு வடகிழக்கே 900 கிலோ மீற்றர் தொலைவில் இன்று சனிக்கிழமை காலை நிலைகொண்டுள்ளது என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

puyal-jaffna

புயல் இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகின்றது என்றும், எனினும் வடபகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் சாத்தியம் உள்ளது என்றும் அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அது அறிவித்துள்ளது.