வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு முதியோர் இல்லத்தில் இருந்தவரை சகோதரி என அழைத்துச் சென்ற பெண்

kaithady_elders_homeயாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த வயோதிபப் பெண் ஒருவரை அவரது சகோதரி எனக் கூறி அடையாளப்படுத்திய மற்றொரு வயோதிப மாது, அவரை அழைத்துச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் மீண்டும் வயோதிபர் இல்லத்திலேயே அவரைக் கூட்டி வந்து விட்டுச் சென்றுள்ளார்.

இல்ல அத்தியட்சகரிடம் வந்த கரணவாய் தெற்கைச் சேர்ந்த தங்கராசா பார்வதி (வயது-65) என்னும் பெண், தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் இல்லத்தில் வந்து தங்கியுள்ள வல்லிபுரம் அன்னம்மா (வயது-80) என்பவரின் சகோதரி எனவும் அவரை அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துத் தன்னுடன் கூட்டிச்சென்றுள்ளார்.

ஆனால், அவர் தனிமையில் விடப்பட்டிருப்பதையும், ஜீவாதாரத்துக்கு மிகவும் கஷ்டப்படுவதையும் கண்ட ஊரவர்கள் கிராம சேவையாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தரிடம் அறிவித்ததைத் தொடர்ந்து சகோதரி முறையான பெண் கிராம சேவகரால் அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

இந் நிலையில் மீண்டும் அப்பெண் கடந்த வெள்ளிக்கிழமை கைதடி வயோதிபர் இல்லத்துக்கு முச்சக்கரவண்டியில் அழைத்து வரப்பட்டார்.

வல்லிபுரம் அன்னம்மாவுக்கு ஒரே ஒரு மகன் எனவும், அவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கியிருப்பதாகவும், அவரது பேரப்பிள்ளைகள் இவரைப் பராமரிப்பதற்குப் பணம் அனுப்புவதாகக் கூறியபடியினாலே சகோதரி முறையான பெண் இவரைக் கூட்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.