வெட்டுக் காயத்துடன் ஆணின் சடலம் மீட்பு; கொக்குவில் பகுதியில் நேற்றிரவு பயங்கரம்

கொக்குவில் பகுதியில் நடுத்தர வயது ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார் என நேற்றிரவு வரை அடையாளம் காணப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து இரவு 8 மணியளவில் அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயில் குளத்தடியில் சடலம் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தின் முகத்தில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் 35 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவரின் சடலம் அது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்துடன் காணப்பட்ட டபிள்யூ.வி.1974 இலக்கம் கொண்ட ஸ்பிளென்டர் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor