விவாகரத்தை உறுதி செய்தார் செளந்தர்யா

ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர் ‘கோவா’ படத்தை தயாரித்தார். சரித்திர பின்னணியுடன் உருவான ரஜினியின் அனிமே‌ஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார்.

soundarya-rajinikanth

சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் சவுந்தர்யாவும், அஸ்வின் ராம்குமாரும் தற்போது பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி உண்மைதான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள செளந்தர்யா ரஜினிகாந்த், தனது திருமண வாழ்வு குறித்து வெளியான செய்தி உண்மைதான் என்று கூறியுள்ளார். தாங்கள் இருவரும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சொந்த வாழ்க்கை குறித்த விவாதங்களை தவிர்க்குமாறும் செளந்தர்யா ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor