விவசாயிகளுக்கு இலவச நெல் விதைகள்

யாழ். மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் எற்பாட்டில் வறட்சியான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச நெல் விதைகளுக்கான நிதி வழங்கும் செயற்றிட்டத்தின் அங்குராப்பணநிகழ்வு நேற்று யாழ். வீரசிங்கமண்டபத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர்; சி.பற்றிக்நிரஞ்சன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இலவச நெல் விதைகளுக்கான நிதி வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில்,

ஒரு ஏக்கருக்கு 2800 ரூபாவுக்கான காசோலைகளை வழங்குவதற்காக செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதில் யாழ் மாவட்டத்தில் 15 கமநல சேவைகள் அலுவகத்தின் ஊடாக 1520 பேர்கள் தமக்கான நஸ்ட ஈட்டு காசோலை பெறுவதற்கான அனுமதிகளை பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் யாழ் மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள, மற்றும் யாழ். மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.