விரைவில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்பு

postofficeஎதிர்வரும் மாதத்திற்குள் அஞ்சல் கட்டணங்கள் சீர்திருத்தப்படும் என அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி சாதாரண தபால்களுக்கான முத்திரை கட்டணங்கள் 5 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன.

வியாபார கடிதங்களுக்கான கட்டணங்கள் 5 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன என்று தபால் மா அதிபர் ரோஹன அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 6 வருடங்களாக தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. எனவே தற்போது இந்த அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானித்ததாக தபால் மா அதிபர் தெரிவித்தார். பொதிகளுக்கான தபால் கட்டணங்கள் (500 கிராம்) 90 ரூபாவாக இருக்கும், தபால் பொதிகளுக்கான கட்டணங்கள் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன.

அஞ்சல் கட்டண சீர்திருத்தங்களுக்கான காரணங்கள் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.