விதிகளை மீறும் சாரதிகளுக்கு தண்டம் செலுத்த புதிய முறை

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வீதி ஒழுங்கை மீறும் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை சாரதிகள், இவ்வருட இறுதிக்கு முன்னரிருந்து அலைபேசி மூலமாக செலுத்த முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

police-AJITH-ROHANA

இந்த புது முறைமை பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அலைபேசிகளின் எந்த வலையமைப்பினூடாகவும் தண்டப்பணங்களை செலுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.