விஜய் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்

விஷாலுடன் பூஜை படத்திலும், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன்.

vijay_shruti_hassan002

பூஜை படத்திற்கு பிறகு, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யுடன் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார்.

இந்த செய்தியை அவரே டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.ஆனால் தற்போது ஸ்ருதிஹாசன் மற்றொரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது, பெரிய படம் இப்போதைக்கு இல்லை. எல்லாம் ஒரு காரண காரியத்துக்காக நடக்கிறது. நீங்கள் அதை கண்டறியுங்கள் என்று பொடி வைத்து கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் இதுவரை கமிட்டான படங்கள் அனைத்தும் 80 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது விஜய் படத்தை பற்றி தான் அவர் கூறுகின்றார் என்று பட வட்டாரங்கள் கூறுகின்றன.