விஜய், அட்லீ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

விஜயா புரடக்ஷன்ஸ் பனரில் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம், விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல்களும் வருகின்றன. ‘தெறி’ படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் இணைகின்றனர்.

vijay-rahman

விஜய்யின் 61-ஆவது படமான இதை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கவிருக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல். பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இப்போது விஜய் நடித்து வரும் ‘பைரவா’வுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் அடுத்த படத்தில் இணையவிருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்புக்கு பல கோடிகள் தேவைப்படுவதால், சுந்தர்.சி.இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்ட இரு மொழிப்படமான ‘சங்கமித்ரா’வை தற்போது தள்ளி வைத்திருப்பதாக தகவல் அடிபடுகிறது. அந்தப் படத்துக்கு கமிட் பண்ணியிருந்த ஏ.ஆர்.ரஹ்மானை விஜய் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்கும்படி கேட்டுக்கொண்டாராம் தயாரிப்பாளர் முரளி. அதற்கு ரஹ்மானும் ஓகே சொல்லிவிட்டாராம்.

Recommended For You

About the Author: Editor