விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஸ்ரீதேவி

இளையதளபதி விஜய் கத்தி படத்துக்கு பிறகு இயக்குனர் சிம்பு தேவன் படத்தில் நடிக்க போவது உறுதியானது.

vijay_shruthihassan001

இப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று கொண்டு வருவதால் யார் யார் நடிக்க போகிறார்கள் என்று ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படம் ராஜவம்சம் பற்றிய கதை அமைப்பு கொண்டதால் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார்.

இதில் தந்தை விஜய்க்கு பழைய நடிகை ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்க உள்ளார்.மகன் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது ஸ்ருதிஹாசனா, ஹன்சிகாவா என்று சந்தேகம் எழும்பி வந்தது.தற்போது ஸ்ருதிஹாசன் உறுதி செய்துள்ளார்.

ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் – சிம்புதேவன் படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்படலாம்.

Recommended For You

About the Author: Editor