Ad Widget

விக்ரமை கலிபோர்னியாவிற்கு அழைத்த அர்னால்டு

விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை சங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சுரேஷ் கோபி, ராம் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

vikram-arnold

சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு கலந்துக் கொண்டார். மேலும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவின் போது விக்ரம் நிறைய வேலைகளில் பிசியாக இருந்ததால் அர்னால்டுடன் பேச வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டதாம். அர்னால்டும் விழா முடிந்ததும் கலிபோர்னியாவிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் விக்ரமை சந்திப்பதற்காக அர்னால்டு கலிபோர்னியாவிற்கு அவரை அழைத்ததாக கூறப்பட்டது. இதை ஆஸ்கார் ரவிச்சந்திரன் உறுதிபடுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ஆமாம் அர்னால்டு விக்ரமை அழைத்தது உண்மைதான். விக்ரம் ஐ படம் வெளியாவதற்கு முன்னால் கலிபோர்னியா சென்று அர்னால்டை சந்திக்கவுள்ளார் என்று கூறியுள்ளார்.

Related Posts