வாகன இலக்கத் தகடுகள் யாழ்.செயலகத்தில் பெறலாம்

kachcheriமோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமைச் செயலகத்தினால் யாழ்.மாவட்ட மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வாகன உரிமையாளர்கள் அலுவலக நாள்களில் பிற்பகல் 2 மணி தொடக்கம் 4 மணிக்கும் இடையில் வாகனப் பதிவுப் புத்தகத்துடன் யாழ்.செயலகத்துக்கு நேரடியாக வருகை தந்து வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.