வல்வெட்டித்துறை கோபுரமொன்றில் புலிக்கொடி ஏற்றிய நபர் கைது

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் புலிக்கொடியை பறக்கவிட்ட நபர் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாகவும் அப்பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவரே வல்வெட்டித்துறையில் புலிக்கொடியை பறக்கவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதியே தனியார் தொலைத்தொடர்பு நிலையக் கோபுரத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.