வட மாகாண தமிழ்த்தினப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு முதலிடம்

வடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் யாழ். மாவட்டம் 202 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத் தமிழ்த் தினப்போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் வவுனியா மாவட்டம் 113 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும், மன்னார் மாவட்டம் 69 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் முல்லைத்தீவு மாவட்டம் 50 புள்ளிகளையும், கிளிநொச்சி மாவட்டம் 40 புள்ளிகளையும் பெற்று நான்காம், ஐந்தாம் இடத்தைப் பெற்றுக் கொண்டன.

வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கான சான்றிதழ்களை வடமாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் வழங்கினார்.

வடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்களை யாழ் இந்துக்கல்லூரி
வென்றது குறிப்பிடத்தக்கது