வட மாகாணத்தில் 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நியமனம்

police_new_DSPஉப பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயிற்சி நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றுள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சி பெற்ற தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றுடன் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு, இன்று யாழ்ப்பாணத்துக்கு நியமனம் பெற்று வருகை தந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் வட மாகாணத்தில் கடமையாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.