வடக்கில் போட்டியிடுவோம்: பொன்சேகா

sarath_18வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் போட்டியிடுவர் என்று அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கட்சியின் பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு இன்று செல்லவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் தங்களுடைய கட்சியின் பிரதிநிதிகள் போட்டியிடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.