Ad Widget

வடக்கில் தமிழ் பெண் பொலிஸாருக்கான நேர்முகத் தேர்வு

Sl_police_flagஇலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழ் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் தமிழ் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாணத்தில் 100 பெண் உப பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் இணைப்பது தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைவாகவே இந்த நேர்முகத் தேர்வு இடம்பெறுவதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஜயசிங்க தெரிவித்தார்.

நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படுபவர்கள் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பயிற்சி நிலையங்களில் பயிற்சியளிக்கப்பட்டு பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், அவர்கள் வடமாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலே பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts