வடக்கில் கோவிட்-19 நோய்த்தொற்றால் 11ஆவது நபர் உயிரிழப்பு

வடக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயால் 11ஆவது நபர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 82 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்றையதினம் உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் கோவிட் -19 நோயால் வடக்கு மாகாணத்தில் கடந்த 4 மாதங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 5 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor