வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: கெலம் மக்ரே

kelum_macreவடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்- 4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிட்டும்.

இலங்கையை இரண்டாக பிளந்து தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் சட்ட பூர்வமான உரிமையாகும் என கெலம் மக்ரே குறிப்பிட்டதாக திவயின சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை சீர்குலைப்பதற்கு தூண்டும் நோக்கில் புலி ஆதரவாளர்கள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமான்றை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு உணவு தட்டுக்கு 60 ஸரெலிங் பவுண்ட்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனல்-4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே மற்றும் பி.பி.சீ ஊடகவியலாளர் பிரன்ஸிஸ் ஹரிசன் ஆகியோர் இலங்கை மாநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் அலிஸ்டர் பட்டிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர் என சிங்களப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.