லிங்கா படப்பிடிப்பில் விபத்து!

லிங்கா படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு பிரம்மாண்ட செட் அமைத்து ரஜினி, சோனாக்ஷி சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர்.

29-lingaa-motion-capture-350x262

இந்த செட் 5 மாடி உயரம் கொண்டது. இதனை சுதர்சன் என்ற ஊழியர் மேற்பார்வை செய்து வந்தார். பாடல் காட்சி எடுக்க செட் தயாராக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வந்தவர் தவறி 5 மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் சில மாதங்கள் நடக்க முடியாது மற்றபடி உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறினர்.