லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் நடிகர் ஷாருக் கான் நிறுத்திவைப்பு

அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக் கானை லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் நிறுத்திவைத்த சம்பவம் வெளியாகியுள்ளது.

Shah-Rukh-Khan

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அமெரிக்காவுக்கு போகும் போதெல்லாம் அங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் சிக்கி படாதபாடு பட வேண்டியதாகி விடுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு சென்றபோது நியூ ஜெர்சி விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அங்குள்ள கம்ப்யூட்டர்களில் ஷாருக் கான் என்ற பெயருக்கு பக்கத்தில் அபாய எச்சரிக்கை காணப்பட்டதால் அவரை துருவித்துருவி விசாரித்த அதிகாரிகள் கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். பின்னர், இவர் வேறு ஷாருக் கான் என்பது தெளிவான பின்னரே அவரை தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதித்தனர்.

இதேபோல், கடந்த 2012-ம் ஆண்டும் நியூயார்க் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரை 2 மணிநேரம் காக்கவைத்து, தீவிர விசாரணைக்கு பின்னர் அனுமதித்தனர்.

இந்நிலையில், தற்போது நியூ ஜெர்சி விமான நிலையத்தில் தன்னை குடியுரிமைத்துறை அதிகாரிகள் மீண்டும் காக்கவைத்த சம்பவத்தை ஷாருக் கான் தனது டுவிட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.

’உலகம் இன்று இருக்கும் நிலையில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை நான் முழுமையாக புரிந்து வைத்துள்ளேன். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மதிப்பும் அளிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவுக்கு வரும்போதும் இங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளால் காக்க வைக்கப்படுவது வேதனைக்குரியது.

ஆனால், இந்தமுறை காத்திருந்த நேரத்தில் சில போக்கிமோன்களை பிடிக்க முடிந்தது’ என வேதனை கலந்த கிண்டல் தொணியில் அமெரிக்க விமான நிலையத்தில் தற்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஷாருக் கான் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts