லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் போக்குவரத்து பொறுப்பதிகாரி கைது

arrest_1யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவுின் உதவிப்பரிசோதகர் 5 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் நிக்கம்பிட்டிய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னிடமிருந்து 5 ஆயிரம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்றார் என இளைஞர் ஒருவர் யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு தெரிவித்ததை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைக்கவசம் அணியாமை, பின்னாலே ஒருவரை ஏற்றி வந்தமை, ஆவணங்கள் கொண்டு வராமை ஆகிய மூன்று குற்றங்களுக்காகவுமே இவர் 5 ஆயிரம் ரூபா லஞ்சமாக கோரியுள்ளார்.

இதன்போது தன்னிடம் இப்போது பணம் இல்லையென்றும் பின்னர் தருவதாக இருவருக்குமிடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. இதன்படி ஏனைய ஆவணங்களை வாங்கி பொலிஸ் அதிகாரி பணத்தை அங்குள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் கொடுத்து விடுமாறும் அது கிடைத்ததும் ஆவணங்களை தருவதாக கூறியிருந்துள்ளார்.

ஆயினும் பணத்தை பெற்ற பின்னர் ஆவணங்களை திருப்பிக் கொடுக்காமையினாலேயே பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பொலிஸ் மா அதிபர் ஊடாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர்.

தற்போது குறித்த அதிகாரி தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.