ரஹ்மானின் புதிய ஆல்பம் வெளியீடு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வாக் இந்தியாவிற்காக புதிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக் இந்தியா, பெண்களின் வலிமையை போற்றும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

NT_141002112548000000-e1412264070287

இதில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இதில் தன் பங்கிற்கு ஒரு ஆல்பம் ஒன்றை உருவாக்கி கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரவுனாக் எனும் அந்த ஆல்பத்தில் லாட்லி எனும் பாடலுக்கு கபில் சிபல் பாடல் வரிகள் எழுத, லதா மங்கேஸ்கர் தன் இனிமையான குரலால் பாடியிருக்கிறார்.

சமீபத்தில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது.