ரயில் மோதி ஒருவர் சாவு!

மல்லாகம் கோட்டைக்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏழாலை மேற்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகவடிவேல் சிவசங்கர் (வயது 46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டவரை, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற கடுகதி ரயில் மோதியுள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts