ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

சரக்கு ரயில் தடம்புரண்டமையால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவைகள், 1 ½ மணி நேர தாமதத்தின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன், ஞாயிற்றுக்கிழமை (16) கூறினார்.

mail train

எரிபொருள் ஏற்றி சென்ற ரயிலொன்று ஹரியால மற்றும் கனேவத்தைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) தடம்புரண்டது.

இதனால், வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து, தடம்புரண்ட ரயிலை சீர் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, 1 ½ மணித்தியால தாமதத்தின் பின்னர் தற்போது ரயில் சேவைகள் சீராக இயங்க தொடங்கியுள்ளன.

அத்துடன், யாழிலிருந்து கொழும்பிற்கான ரயில்களும், கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில்களும் சீராக சேவையில் ஈடுபடுவதாக அவர் மேலும் கூறினார்.