ரஜினி உயிரை காப்பற்றிய பணியாளர்! கண்கலங்கி நன்றி சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார் எப்போதும் கலகலவென இருக்கும் மனிதர். ஆனால், லிங்கா இசை வெளியீட்டு விழாவில் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்றை கூறி கண் கலங்கினார்.

lingaa_ks-ravikkumar

இவர் பேசுகையில் ‘ஒருநாள் மழையில் ரஜினி ரயில் பக்கத்தில் நடந்து வருவது போல ஒரு காட்சியை படமாக்கினேன். அந்த மழைக் காட்சியை ஜிம்மி ஜிப் கேமரா வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாங்களே செயற்கை மழையை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் சொன்ன உடனே நிஜத்திலேயே நல்ல மழை பெய்தது.

அப்போது பெய்த மழையில் ஒயர்கள் எல்லாம் தண்ணீரில் கிடப்பதைக் கவனிக்காமல் இருக்க, ஜிம்மி கேமரா வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் ஷாக் அடித்தது. ஒரே சத்தம். நான் அதை எல்லாம் கவனிக்காமல், “மழை அந்தப் பக்கம், கேமரா இந்த பக்கம், அந்தப் பக்கம்” என்று கூறிக் கொண்டிருந்தேன். பாட்டு வேறு ஒருபுறம் ஒடிக் கொண்டிருக்கிறது.

யாரும் எதிர்ப்பாரத விதமாக ஷாக் அடித்ததில் ஜிம்மி கேமராவை ஆப்ரேட் செய்த ஜவஹர் தூக்கி வீசப்பட்டார். அப்போது, ரஜினி இருந்த பக்கமாக கிரேன் போய்க்கொண்டிருந்தது. தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று மறுபடியும் எழுந்து ஷாக் அடிக்கும் கிரேனைப் பிடித்து நிப்பாட்டினார் ஜவஹர்.’ என்று கூறி ஒரு நிமிடம் கண் கலங்கினார்.