யுவதியை கடத்த முயன்ற கும்பல் கைது

arrest_1இராசாவின் தோட்ட வீதியில் யுவதியொருவரை கடத்த முற்பட்ட வான் ஒன்றை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், கடத்தல்காரர்களையும் வானையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று 12 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் வானில் வந்த சிலர் வீதியில் சென்றுகொண்டிருந்த யுவதியொருவரின் கையைப் பிடித்து வானிற்குள் ஏற்றுவதற்கு முற்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் வானினைச் சுற்றி வளைத்து வானில் இருந்தவர்களையும் பிடித்தனர்.

தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த யாழ். பொலிஸார் வானையும் மேற்படி கடத்தலில் ஈடுபட்ட நபர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.