தான் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த வேளையில் சிறீலங்காப் படையினரால் கொத்துக்குண்டுகள் வீசப்படவில்லையென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய வேளை அதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனது காலத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
வெளியிடப்பட்ட ஒளிப்படங்களை ஆதாரமாகக் காட்டமுடியாது. வேறு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி, இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொரு மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போதும் எழுப்பப்படுவதாகக் கூறியுள்ளார்.