யாழ். வேம்படி மகளீர் பாடசாலை முன்பு பழைய மாணவிகள் ஆர்ப்பாட்டம்

யாழ். வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை முன் பழைய மாணவிகள் இன்றைய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது இதில் வேம்படிக்கு வேண்டும் நிரந்தர அதிபர் கல்விப் புலமே குழப்ப நிலையினை நியாயமாக தீர்த்து வை !

பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட அதிபரிடம் பெறுப்புக்களை கையளி, கல்வி அதிகாரிகளே ஏன் இந்த அலட்சியம் உடனடியாக பொறுப்புகளை கையளி கல்வித் தரத்தை நிலைநிறுத்து போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உரிய அதிகாரிகள் வந்து தீர்வு வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுச்சேவை ஆணைக்குழுவினால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள வேணுகா சண்முகரத்தினத்திடம் பொறுப்புக்களை கையளிக்க வேண்டும் எனக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webadmin