யாழ்.,வவுனியா பஸ்கள் மீது கல்வீச்சு: சாரதி படுகாயம்

attack-attackயாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்கள் இரண்டு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிலாபம்-கொழும்பு வீதியில் காக்கைபள்ளி மற்றும் மாதம்பே-இட்டக்குளம் பிரதேசத்தில் வைத்தே இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.45 மணியளவிலேயே இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பஸ் மீது சிலாபம்-கொழும்பு வீதியில் காக்கைபள்ளி எனுமிடத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சாரதி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது வவுனியா- இட்டக்குளம் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் எவருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மாதமே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.