யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக பிரேம்சங்கர் நியமனம்

courtயாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக அன்னலிங்கம் பிரேம் சங்கர் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இவர் தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

யாழ். மேல்நீதிமன்ற ஆணையாளராக இதுவரை காலமும் கடமையில் இருந்த ஜே.விஸ்வநாதன் ஓய்வு பெற்றதையடுத்து பிரேம்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.