யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு!!

யாழ். மாநகர சபையின் முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், யா. மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நீதிமன்றங்களில் அவருடன் தொடர்பை பேணிய பலர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையிலேயே விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் மார்ச் 16ஆம் திகதிக்குப் பின்னர் கடந்த ஒரு வார காலமாக தொடர்பைப் பேணியவர்களை தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியுடன் அல்லது சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அவர்களை தொடர்புகொண்ள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor