இலங்கைக்கான பிரித்தானிகர் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் (James Duaris) உள்ளிட்ட இருவர் அடங்கிய குழுவினர் நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தனர்.
இதன்போது இவர் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்,
மாவட்டத்தின் அபிவிருத்திகள், உட்கட்டுமானங்கள், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக கூறினார்.
வளலாய் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் காணிகள் தொடர்பிலும் எடுத்து கூறியதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
யாழ் உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் பல்வேறு தேவைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.