யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளரை இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் சைக்கிள்கள் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருள்கள் கொள்வனவுகளுக்குரிய விவரங்களுடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டமை, மற்றும் பொருட்கள் கொள்வனவின் போது ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாட்டினை அடுத்தே விசாரணை நடத்தப்படுவதாக ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.