யாழ்.மாநகர சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 9 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் (பனம் பொருள்கள்) வியாரிகளும், மூன்று மரக்கறி வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

அதனால் சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: Editor