யாழ் மத்திய பேருந்து நிலையம் வழமைக்கு திரும்பியது!

யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்று (7) காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அரச, தனியார் பேருந்துகள் வழக்கம் போல சேவைகளை ஆரம்பித்துள்ளன.

யாழ் நகரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டன.

இதன்படி, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பயணிகள் சேவை நிறுத்தப்பட்டு, தற்காலிகமாக வீரசிங்கம் மண்டபத்திற்கு அண்மையிலிருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor