யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஜெபரட்ணத்திற்கு பதவியுயர்வு

postofficeயாழ்.பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் சூசைப்பிள்ளை ஜெபரட்ணம் கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அத்தியட்சராக பதவியுயர்வு பெற்று செல்கின்றதாக யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சக அலுவலர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகராகவும் நுண்ணாய்வுப் பரிசோதராகவும் கடமையாற்றிய இவர் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் திட்டமிடல் அபிவிருத்தி அத்தியட்சகராக பதவி ஏற்கவுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கடந்த 7 வருடமாக இவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor