யாழ். பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி நிறுத்தப்பட்டிருக்கின்ற பொலிஸாரை அங்கிருந்து விலக்கிக்கொள்வதற்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இன்று திங்கட்கிழமை மாலைவேளைக்குள் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்றும் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறும்.
இச்சந்தர்ப்பத்திலேயே யாழ். பல்கலைக்கழகத்தினை சுற்றி பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டிருக்கும் பொலிஸாரை விலக்கிகொள்வது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
பல்கலைகழக வளாகத்தில் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டிருக்கின்ற பொலிஸாரை விலக்கிக்கொள்வது என பொலிஸ் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் இன்று மாலைவேளையிலேயே பொலிஸார் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.