யாழ் பல்கலை மாணவர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்; ஐ.தே.க கோரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வை வழங்க வேண்டுமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளது எனவே காலம் கடந்த தீர்மானங்களை எடுக்காமல் உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor