யாழ். பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருதியுமே வகுப்பு பகிஷ;கரிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டது.

இதனால் தொடர்நது இரண்டு நாட்களுக்கு வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை உடைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தினர் குறிப்பிட்டனர்.

இதன்போது, குறித்த அலுலவகத்தில் காணப்பட்ட பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webadmin