யாழ். பல்கலை மாணவர்கள் அடையாளப் போராட்டம்

jaffna-universityயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (02) முற்பகல் 11.15 மணியளவில் அடையாளப் போராட்டம் ஆரம்பமாகியது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரம் நீண்டநாட்களாக விடுமுறை விடுத்தமை, மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்தாமை ஆகியவற்றைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எதிராக பதாகைகளை தாங்கியவாறு மாணவர்கள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த மாதம் 11ஆம் திகதியிலிருந்து இந்த மாதம் முதலாம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.